Tuesday, February 20, 2007

சிறுகதை - அத்தை

அத்தை


குழந்தைகள் பட்டாளம் சுசி அத்தையைச் சுற்றி எப்போதும் வட்டமடித்தபடியே இருக்கும். அத்தையின் அன்பு மழையில் கட்டுண்டிருக்கும் குழந்தைகள், மொட்டை மாடியில் நிலவு வெளிச்சத்தில் பேசிக் கொண்டே இருப்பதில் அலாதி பிரியம்.


அத்தையின் முகத்தில் சூரிய கதிர்களை மிஞ்சும் பிரகாசத்தை எப்போதும் பார்க்க முடியும். ஒளிப்பட்டால் மலரும் பூக்களைப் போல் சக தோழிகளையும், குழந்தைகளையும் பார்த்தவுடன் ஒளி வீசும் கண்களோடு, சிரித்த முகத்துடன் பேசத் துவங்கி விடுவார். அத்தை பேச்சில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.


அத்தைக்கு மட்டும் திருமணமாகியிருந்தால், இந்நேரம் இரண்டு - மூன்று குழந்தைகளுக்கு தாயாகியிருப்பார். தன் பள்ளித் தோழிகளுக்கு மட்டுமல்ல; அத்தை பார்த்து வளர்ந்த வாண்டுகளுக்கு கூட திருமணம் ஆகிவிட்டது.


அத்தைக்கு ஐந்து அண்ணண்கள், ஒரு தம்பி, இரண்டு அக்கா என பெரிய ரத்தவுறவு இருந்தது. அவர்களது பிள்ளைகளையெல்லாம் வளர்ப்பதில்தான் அத்தையின் வாழ்க்கை இன்பகரமாக! ஓடிக்கொண்டேயிருந்தது! அத்தைக்கு மட்டும் திருமண ஆசை இல்லாமலா இருக்கும்! அத்தை 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது காலில் ஏற்பட்ட சிறு காயம்தான் அவரது வாழ்க்கையை நிரந்தர ஊனமாக்கி விட்டது.


அத்தையின் காயத்தை ஆற்றுவதற்கு பார்காத டாக்டரில்லை, போடாத மருந்தில்லை; ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொரு வைத்தியம் மட்டுமா சொன்னார்கள்! நோயின் பெயரைக்கூட மாற்றிக் கொண்டே இருப்பார்கள்... இப்படியே இருபது வருடங்கள் ஓடி விட்டது. இருந்தாலும் என்ன அத்தையின் மிருதுவான உள்ளமும், பால்வடியும் முகமும் அப்படியேதான் இருந்தது!
அத்தையின் காலில்தான் ஊனம் ஏற்பட்தேயொழிய மனதில் அல்ல!


கலகலப்பான உள்ளத்தோடு வீட்டு வேலைகளை கவணிப்பதோடு, தன்னுடைய வேலைகளையும் தானே செய்துக் கொள்வார். ஊனமுற்றோர் சான்றிதழ் பெறுவதற்காக வருடம் முழுவதும் அலையவேண்டியிருந்தது அப்போதுகூட, நம்மால் யாருக்கும் தொந்தரவு கூடாது என்று உறுதியான மனதோடு, குருதி வழியும் நொந்துப்போன கால்களோடு சான்றிதழ் பெறுவதில் வெற்றி பெற்றார்! பலமுறை அலைந்ததில் சில புதிய தோழிகளையும் நண்பராக்கிக் கொள்ள தவறவில்லை.


ஒருமுறை, அத்தை இரண்டு நாட்களாக காணாமல் போய்விட்டார்! உறவினர் வீடுகளில் இருந்து, பல இடங்களில் தேடிப் பார்த்தாகி விட்டது. காவல் நிலையத்தில் கூட காணவில்லை என புகார் கொடுத்து விட்டார்கள், அத்தை மனம் உடைந்து ஏதாவது செய்துக் கொண்டாரோ என்றுகூட பேசத் துவங்கி விட்டனர்... மூன்றாவது நாள் காலையில் அத்தை சவகாசமாக வீட்டுக்கு வந்து விட்டார்! என்ன ஏது என்று அலறியடித்துக் கொண்டு கேட்டபோது, கன்னியாகுமரிக்கு போகனும்னு நினைச்சேன் போய்ட்டு வந்துட்டேன்னு சாதாரணமாக கூறியது அப்படியே என்னுள் பதிந்து விட்டது.
எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கெள்ளும் அத்தை, தான் நினைத்ததை உடனே செய்து விடுவார் அப்படிப்பட்ட குணம் படைத்தவர்.


அத்தையின் முறைப் பையன் ஒருமுறை திருமணம் செய்துக் கொள்ள முன்வந்தபோது கூட வேண்டாம் என மறுத்து விட்டவர்! எப்படியோ, அவருக்குள் அந்த ஆசை குடிகொண்டு விட்டது!
தான் ஏதாவது முடிவு எடுத்து விட்டால் அதனை வெளியே சொல்வதற்கும் தயங்கியதில்லை!


எப்படி அத்தை திடீர்னு உங்களுக்கு திருமண ஆசை வந்தது என்று கேட்க! ‘சும்மா இப்படியே இவ்வளவு நாள் ஜாலிய இருந்துட்டேன்! சரி திருமணன்னு சொல்றாங்களே அதுல என்ன சந்தோஷம் இருக்குதுன்னு பாக்கலாம்னுதான்...’ என மிகச் சாதாரணமாக, அதே ஒளி வீசும் கண்களோடு, சிரித்த முகத்தோடு வெளிப்படுத்தினார்... ஒரு பக்கம் அத்தையின் ஆசையில் அர்த்தம் இருந்தாலும், இந்த மனிதர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லையே என்ற குழப்பம்....



அத்தையின் அம்மாவுக்கும் வயசாகிக் கொண்டே இருந்தது. ‘சரி! பொண்ணு ஆசைப்படறா... அவளுக்கும் கல்யாணம்னு ஒண்ணு ஆயிட்டா... அவ குழந்தை, குட்டின்னு காலத்தை ஓட்டிடுவா! அண்ணன், தம்பின்னு... யாரையும் நம்ப வேண்டியதில்லப்பார்னு...’ அத்தையின் அம்மா கூறியதில் அர்த்தம் இருந்தது.



அத்தையின் திருமண ஆசை பற்றி உறவினர்களிடமும், நண்பர்களிடமும் ஏன் கல்யாண மாலையில் கூட பதிவு செய்து வைத்து விட்டார்கள்... ‘அட எம்பொண்ணுக்கு எந்த ஜாதியா இருந்தாக்கூட பரவாயில்லை... ஆனா இந்துவா இருக்கணும்...’ அவ்வளவுத்தான் என்பது வரையில் வந்து விட்டார்கள்.


பல பேர் வருவதும், போவதுமாக இருந்தார்கள்! அத்தை குடும்பத்தில் வசதிக்கு ஒன்றும் குறையில்லை. இருந்தாலும் என்ன! ஜாதகம்தான் பொருந்தவில்லை என்று... தள்ளிக் கொண்டே வந்தது....



இந்நிலையில், நாகர்கோவில் சந்திரனுக்கு ஊனமான பெண்தான் திருமண பொருத்தமாக அமையும் என்று ஜாதகத்தில் சொல்லியிருந்தார்களாம்!


அத்தையின் விலாசத்தை கண்டுபிடித்து சென்னைக்கு வந்து சந்திரனும், அவரது அம்மாவும் பெண் பார்த்து விட்டுப் போனார்கள். ஊருக்கே பிடிக்கும் அத்தையை மாப்பிள்ளைக்கு பிடிக்காமல் போகுமா!


சந்திரன் ஊருக்கு போனதும் அத்தையின் நினைவாகவே இருந்தார்! தினந்தோறும் அத்தைக்கு போன் போட்டு அன்பு மொழியில் நேசமாக பேசுவார்! அத்தை வெளிப்படையானவர், எதையும் மறைக்காமல், ஒன்று விடாமல் அப்படியே வாண்டுகளிடம் சொல்லி விடுவார்.


புதிய சந்திரனுக்கு இதயத்தில் இடம் கொடுத்து விட்டார் அத்தை! அப்புறமென்ன! நட்சத்திரம் சிகிதமாக இருக்கும் இரவு சந்திரன் ஏக்கமாகி விட்டது!


அத்தைக்கு ஆசையாக புடவை எடுக்கப்போன சந்திரன், பிறகு சென்னை பெண்கள் எல்லாம் சுடிதார்தான் போடுவார்கள் என யோசித்து சுடிதாரும், புடவையுமாக எடுத்து வைத்து விட்டார். அத்தோடு நிற்கவில்லை! ‘ஐன்டீனின் ஒளி தியரி புதிய காதலர்களுக்கு கைகொடுக்காமலா போய்விடும்’ கூடவே ஒரு புதிய செல் போனையும் வாங்கி மொத்தமாக அத்தைக்கு அனுப்பி வைத்து விட்டார்!


ஐன்°டீனிடம் சார்பியல் தியரி குறித்து கேட்டபோது, அவர் அளித்த விளக்கம் மிக அழகானது! “அழகான பெண்ணிடம் இரண்டு மணி நேரம் பேசினால் அது இரண்டு நிமிடம் போல் இருக்கும்; அதே நேரம் எரியும் அடுப்பின் மீது இரண்டு நிமிடம் உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் போல் இருக்கும்” என்று கூறினார்...


அதேபோல் செல்போனின் ஒளிகள் நாகர்கோவிலுக்கும், சென்னைக்கும் ரன்னெடுத்தே சோர்ந்து போகும் அளவிற்கு நாள்தோறும் நான்கு மணி நேரத்திற்கு குறையாமல் அவர்களது பேச்சுவும், கும்மாளமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.


ஏன்டீ, இன்னுமா தூக்கம் வரலை உனக்கு! அப்படி என்னதான் பேசுவீயோ அவனோடு... என்று தன் தாயே கூறுமளவிற்கு அவர்களது பேச்சு நடு ஜாமத்திலும் நீடிக்கும்...


அத்தையோடு யாராவது பையன்கள் பேசும்போது கூட, ‘டேய், என்னடா நீ கூட மாமா மாதிரியே பேசுற...’ என்கிற அளவிற்கு எங்கும், எதிலும் சந்திரனையே சுற்றி சுற்றி வந்தார் அத்தை...
அத்தையின் சந்தோஷம் அவருக்கு மட்டுமா? வாண்டுகளுக்கும், தோழிகளுக்கும்தான்!


திருமண தேதி எப்போது என்ற அளவிற்கு அவர்களது பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, சந்திரனின் வேகமான நடவடிக்கை வீட்டில் பெரிய பிரச்சினையாக மாறுகிறது... நீண்ட நாளாக கல்யாணம் ஆகாத சந்திரன் ‘ஜாதகத்தையே மாற்றி பொருத்தம் செய்து விட்டார்!’ என்பதுதான். அவ்வளவுதான், அவரது தாய் தன் ஒரே பிள்ளை இப்படி செஞ்சுட்டானே என்று புலம்பி.... புலம்பி.... புயலே வீசி விட்டது அவரது குடும்பத்தில்...


சந்திரனிடம் இருந்து இரண்டு நாட்களாக கால்கள் வராததால் உலகமே தன்னிடமிருந்து துண்டித்து விட்டதுபோல் துடித்தார் அத்தை! இரண்டு நாட்கள், இரண்டு வாரமாக மாறியது... காரணம் அறியாமல் துடித்தார்... எப்படியோ சந்திரன் வேலை பார்க்கும் இடத்தின் தொலைபேசி எண்ணை கண்டு பிடித்து அவருக்கு போன் போட்டுப் கேட்டபோது, ‘சந்திரன் வெளி நாடு சென்று விட்டதாக கூறுகிறார்கள்...’ என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்தார் அத்தை! எதற்கும் அசராத அத்தையின் ஒவ்வொரு பொழுதும் ஒரு வருடம் போல் கழிந்தது!


அத்தை நடந்த விஷயத்தையெல்லாம் தன் நண்பர்களோடு மனம் விட்டுப் பேச... ‘சந்திரன் எங்கே என்ற கேள்விகள் தன் இதயத்தை முட்டிக் கொண்டே இருந்தது...’ கூற, அத்தைக்காக எதையும் செய்யும் இளசுகள் கன்னியகுமரி எக்°பிர° வேகத்தில் நாகர்கோவில் சென்று விசாரித்ததில், ‘சந்திரனின் குடும்பத்தினர் வேறு இடத்தில் பெண்ணை பார்த்து அதிரடியாக திருமணம் செய்து வைத்து விட்டார்கள்’ என்ற தகவல் கிடைக்க! அதிர்ச்சியான இளசுகள் அத்தையிடம் இதனை எப்படி சொல்வோம் என துடித்தனர்...


அத்தையின் ஒவ்வொரு நொடியும் சந்திரனின் நினைவாகவே கழிந்தது... இரவில் தூங்குவதை விட அந்த கால் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு விண்ணில் முட்டிக் கொண்டே இருந்தது....
அத்தையின் மனதை திசை திருப்ப, ‘ஹெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாற்றையும், பீத்தேவனின் இசை ஞானத்தையும் எல்லாம் கூறவோம்’ இருந்தாலும் என்ன?


காதல் நோய்க்கு யாரால் மருந்திட முடியும்! காதல் ஒரு முறை உள்ளத்தில் புகுந்து விட்டால், கட்டாற்று வெள்ளம்போல் கரை புரண்டு ஓடிக்கொண்டே இருக்குமல்லவா! அணை போடாத வரை தடையேது காதலுக்கு!


அத்தையிடம் எவ்வளவு நாளைக்கு மறைக்க முடியும் என தீர்மானித்த இளசுகள், மிக நிதாணமாக அத்தையிடம் நடந்ததை கூற, அத்தையின் கண்களில் காவிரி பாய்ந்ததோடு, அவரது இதயம் முதல் முறையாக ஊனமாகி விட்டது!

Labels:

Monday, October 16, 2006

Over 70 pc cast votes in 2nd phase of civic polls in TN: Sporadic violence

Dinamani.com - TamilNadu Page

உள்ளாட்சித் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது

சென்னை, அக். 16: தமிழகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை அமைதியாக நடைபெற்றது. சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகின.

அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்ற சாலை மறியல்கள், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றைத் தவிர, பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது.

திருச்சி, மதுரை மாநகராட்சி உள்பட 6 ஆயிரத்து 645 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 54 ஆயிரத்து 630 பதவிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இத் தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.31 லட்சம் உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் சுமார் 18 ஆயிரம் பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல்கட்டமாக 67 ஆயிரம் பதவிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின.

2-ம் கட்டமாக சுமார் 54 ஆயிரம் பதவிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அடுத்து, இத் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீஸôர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் குறிப்பாக, நீலாங்கரை, கொட்டிவாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம், பொழிச்சலூர், கவுல்பஜார் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான வாக்குச் சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்டவரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

திருச்சி, மதுரையில் வன்முறை: திருச்சி மற்றும் மதுரை மாநகராட்சிக் கவுன்சிலர் பதவிகளுக்காக நடைபெற்றத் தேர்தலில் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளரின் கார் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

மதுரையில் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் கடத்தப்பட்டதாகக் கூறி, அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தினர்.

சென்னையில்...: சென்னை புறநகர்ப் பகுதியான மேடவாக்கத்தில் வாக்குச்சீட்டுகளை சூறையாடியதாக ஊராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.

அம்பத்தூரில் உருட்டுக்கட்டைகளுடன் கள்ள வாக்குப் போட வந்ததாக ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர் நகராட்சித் தேர்தலில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறி அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை வன்முறைச் சம்பவங்கள் காரணமாக வாக்குப் பதிவு பாதிக்கப்பட்ட 26 இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: 2 கட்டங்களாக பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தமிழகம் முழுவதும் 826 மையங்களில் புதன்கிழமை (அக். 18-ல்) நடைபெறும்.




வாக்குச்சீட்டுகளை தூக்கிச் சென்ற அதிமுக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் உள்பட 7 பேர் கைது

சென்னை, அக். 16: சென்னை மேடவாக்கத்தில் பள்ளிக்குள் புகுந்து போலீஸôரை தாக்கிவிட்டு வாக்குச் சீட்டுகளை தூக்கிச் சென்ற அதிமுக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் காளிதாஸ் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

காளிதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் செய்த 82 பெண்களைப் போலீஸôர் கைது செய்தனர்.

சென்னை மேடவாக்கம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 126-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுபவர் காளிதாஸ். இவர், அதிமுக ஆதரவுடன் போட்டியிடுவதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவில் மேடவாக்கம் அரசு பள்ளிக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அங்கு 234-வது வாக்குச் சாவடியில் இருந்த 600 வாக்குச் சீட்டுகளையும், 235-வது வாக்குச் சாவடியில் இருந்த 3,421 வாக்குச் சீட்டுகளையும் தூக்கிச் சென்றனர்.

இதைத் தடுக்கவந்த சப்-இன்ஸ்பெக்டர் முத்தேலு உள்பட 3 தலைமைக் காவலர்களை அவர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதில், ஒருவரின் செல்போன் தவறி கீழே விழந்தது. உடனே, அந்த செல்போனை போலீஸôர் கைப்பற்றினர்.

விசாரணையில், அந்த செல்போன் வேட்பாளர் காளிதாஸின் ஆதரவாளர் அசோக்குக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து காளிதாஸ், பாலகிருஷ்ணன், அசோக், மகேஷ், செல்வம், சுரேஷ், சுந்தர் ஆகியோரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

வாக்குச் சீட்டுகளுடன் இருவர் தலைமறைவு: மொத்தம் 4,021 வாக்குச் சீட்டுகளுடன் தப்பி ஓடிய காளிதாஸின் தம்பி குமார் மற்றும் ரவி ஆகியோரை போலீஸôர் தேடி வருகின்றனர்.


சில நிமிடங்களில் பதிவான ஆயிரம் வாக்குகள்

சென்னை, அக். 16: பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஆயிரம் வாக்குகளை சில நிமிடங்களில் பதிவு செய்தது என்று திருவொற்றியூர் 31-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் மாலதி கூறினார்.

திருவொற்றியூர் நகராட்சித் தேர்தலின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து அவர் கூறியது:

நான் கடந்த மூன்று தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். கடந்த முறை சுயேச்சையாகப் போட்டியிட்டு இதே வார்டில் வெற்றி பெற்றேன். பின்னர் திமுகவில் இணைந்தேன். இந்த தேர்தலில் எனக்கு திமுகவில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் சுயேச்சையாகப் போட்டியிட்டேன்.

ஆனால் எனக்கு பழக்கமானவர்களே பெரிய கத்திகளுடன் உள்ளே புகுந்து மிரட்டியதைப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். என் வாழ்நாளில் இத்தகைய வன்முறை நடைபெற்ற தேர்தல்களைப் பார்த்ததே இல்லை. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை சில நிமிடங்களில் பதிவு செய்துவிட்டு பின்புற வாசல் வழியாக மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர் என்றார் அதிர்ச்சி கலந்த பயத்துடன்.


26 இடங்களில் மறுவாக்குப் பதிவு: 2-ம் கட்ட தேர்தலில் 70% வாக்குப் பதிவு

சென்னை, அக். 16: தமிழகத்தில் 2-ம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரத்து 962 பதவியிடங்களுக்கு அக். 13, 15 (வெள்ளி, ஞாயிறு) ஆகிய நாள்களில் பெரும்பாலான இடங்களில் அமைதியாகத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் முதற்கட்டமாக 72 சதவீதமும், 2-ம் கட்டமாக 70 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 2001-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்டமாக 62.9 சதவீதமும், 2-ம் கட்டமாக 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. 525 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது.

சென்னை மாநகராட்சியில் கடந்த 2001-ம் ஆண்டில் 36.11 சதவீதமும், தற்போது 55.03 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழகத்தில் இத் தேர்தல் பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடைபெற்றுள்ளது.

ஒரு சில இடங்களில் மட்டுமே அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன.

மறு வாக்குப்பதிவு:ஆனால், தற்போது 26 வாக்குச் சாவடிகளில் மட்டுமே மறு வாக்குப்பதிவு அக்டோபர் 16, 17 (திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

இதில் 2-ம் கட்டமாக தேர்தல் நடந்த 26 வாக்குச் சாவடிகளில் மட்டும் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

மாவட்ட வாரியாக மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை விவரம்:

  • தர்மபுரி,
  • திருநெல்வேலி தலா 5,

  • விருதுநகர் 4,
  • கடலூர்,
  • விழுப்புரம் தலா 3,

  • ராமநாதபுரம்,
  • திருவள்ளூர்,
  • மதுரை தலா 2,

  • தேனி 1.


  • CPI(M) charge against DMK

    Dinamani.com - TamilNadu Page

    சென்னையில் மறு தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    சென்னை, அக். 16: உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும், திமுக வேட்பாளர்களும் தொழில்முறை ரவுடிகளுடன் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். எனவே சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும், திமுகவின் நியாயமற்ற அணுகுமுறை காரணமாக சென்னை மாநகராட்சியில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் 8 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டியிடுவதென தீர்மானித்தது.

    தேர்தல் தினத்தன்று நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் பற்றியும், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி நடத்திய மோசடி வாக்குப் பதிவுகள் குறித்தும் கட்சியின் வட சென்னை, தென் சென்னை மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், பார்வையாளர்கள், காவல்துறை அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட அனைவரிடமும் புகார் செய்தும் எவ்வித பயனும் இல்லை.

    ஆயுதம் தாங்கிய தொழில்முறை ரவுடிக் கும்பல்களுக்கு திமுக வேட்பாளர்களும், சில சட்டப்பேரவை உறுப்பினர்களும் தலைமை தாங்கி, வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து தேர்தல் முகவர்களை விரட்டியடித்து விருப்பம்போல வாக்குச் சீட்டுகளை முத்திரையிட்டு, வாக்குப் பெட்டிகளை நிரப்பியுள்ளனர். தட்டிக் கேட்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரையும், முகவர்களையும் தாக்கியுள்ளனர். தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்ட 8 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

    வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீதோ, இதற்குப் பொறுப்பானவர்கள் மீதோ வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

    அதேநேரம் மார்க்சிஸ்ட் கட்சியினர் சிலர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத அளவுக்கு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். தாக்கியவர்கள் மீது கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அறிக்கையில் வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.

    First phase civic polls end; Opposition seeks repoll in Chennai

    சென்னை உள்ளாட்சித் தேர்தல், வன்முறை தொடர்பான தமிழ் வலைப்பதிவுகள்:

    1. ஹரிஹரனின் உலகங்கள்: (35) முரசொலிப்பு : சென்னையில் "அர'வழியில் தேர்தல்!

    2. உள்ளாட்சித் தேர்தல் 2006: தேர்தல்வன்முறை வழக்கு விசாரணை

    3. ஓகை: சென்னையில் வரலாறு காணாத வன்முறை

    4. குழலி பக்கங்கள்: திமுக அரசின் கரும்புள்ளி

    5. உலகின் புதிய கடவுள்: 192.ஹிட்லர் திராவிட முன்னேற்ற கழகம்

    6. மாயவரத்தானின் வலைப்பூ....Third Vision: அப்புறம் ஏன்(டா) தேர்தல் நடத்துறீங்க?[#380]

    7. உள்ளாட்சித் தேர்தல் 2006: தேர்தலில் வன்முறை

    8. உள்ளாட்சித் தேர்தல் 2006: தேர்தல் வன்முறை-2

    9. எதையும் ஒருமுறை: உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் பயங்கர வன்முறை

    10. IdlyVadai - இட்லிவடை: ஜெ - பேட்டி

    11. IdlyVadai - இட்லிவடை: உள்ளாட்சி தேர்தல் - செய்திகள், படங்கள்

    12. IdlyVadai - இட்லிவடை: உள்ளாட்சி தேர்தல் - அட்டகாசம், வன்முறை, கள்ள ஓட்டு

    13. oosi aka pin: Tamil Daily Dinamani Cartoon : உள்ளாட்சி தேர்தல் காட்சிகள் About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc

    14. எண்ணம்: முதன்முறையாக வாக்களித்தேன்





    | |

    Friday, October 13, 2006

    Keeripatti - History Repeats Itself

    Dinamani.com - TamilNadu Page

    கீரிப்பட்டி ஊராட்சித் தலைவராக தேர்வானவர் தலைமறைவா?

    கீரிப்பட்டி, அக். 13: கீரிப்பட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வு பெற்றவர் தலைமறைவாகி இருப்பதாக பிரச்சினை எழுந்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய 3 ஊராட்சித் தலைவர் பதவிகளும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்தக் கிராமங்களில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற முடியாமலும், தேர்தல் நடைபெற்று தேர்வு பெற்றவர்கள் பதவியில் நீடிக்க முடியாத நிலையும் இருந்துவந்தது.

    இந்த நிலையை மாற்ற அரசும் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து முயற்சித்த போதிலும், தீர்வுகாண முடியாத நிலையே இருந்துவந்தது.

    தற்போதைய தேர்தலில் பரமன், சுப்பன் மற்றும் பாலுச்சாமி ஆகிய 3 பேர் கீரிப்பட்டி ஊராட்சிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அதில் 2 பேரின் வேட்பு மனுக்கள் குறைபாடுகள் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டன.

    வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களில் ஒருவரான, அக் கிராமத்தைச் சேர்ந்த எம்.பாலுச்சாமி (35) தாக்கல் செய்த மனு மட்டும் ஏற்கப்பட்டது.

    இதனால் ஊராட்சித் தலைவராக போட்டியின்றி பாலுச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்த கடந்த செப். 27-ம் தேதி முதல், அந்தக் கிராமத்துக்கு வரவில்லை என கிராமத்தினர் தெரிவித்தனர். அவரது வீடும் பூட்டிக் கிடக்கிறது.

    அவரது உறவினர்களும் வெளியூரில் உள்ளதாக கிராம மக்கள் கூறினர்.

    கீரிப்பட்டி ஊராட்சியானது, கீரிப்பட்டி மற்றும் போலியம்பட்டி கிராமங்களை உள்ளடக்கியது. மொத்தம் 1,287 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 241 பேர் தலித்துகள்.

    Thursday, October 12, 2006

    Mookkuthi distribution by ADMK candidate in Porur

    Dinamani.com - Chennai Page

    வாக்காளர்களுக்கு மூக்குத்தி விநியோகம்: அ.தி.மு.க.வினர் கைது

    சென்னை, அக். 12: போரூர் காரம்பாக்கத்தில் வாக்காளர்களுக்கு மூக்குத்தி விநியோகித்த அ.தி.மு.க. வேட்பாளரின் உறவினர்கள் 3 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    போரூரை அடுத்துள்ளது காரம்பாக்கம் ஊராட்சி. இதன் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் காசி ஜெனார்த்தனம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் க.கணபதி போட்டியிடுகிறார்.

    இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தனக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் எனக் கோரி வாக்களர்களுக்கு அ.தி.மு.க.வேட்பாளர் காசி ஜெனார்த்தனம் மூக்குத்திகள் கொடுத்தாக தி.மு.க. வேட்பாளர் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸôர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டவர்களிடம் சோதனை நடத்தினர்.

    இதில், காசி ஜெனார்த்தனின் தம்பி மணி (50), அவரது உறவினர்கள் சுரேஷ், கட்சியின் கிளைப் பொருளாளர் சரவணன் என்ற முருகன் ஆகியோரிடம் இருந்து 23 மூக்குத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும், 25 பேருக்கு அவர்கள் மூக்குத்தி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

    'Think about your offsprings & vote' - Karunanidhi

    Dinamani.com - TamilNadu Page

    "திராவிடர்களின் தலைவன் என்பதே பெருமை'

    சேலம், அக். 12: "தமிழகத்தின் முதல்வர் என்பதைவிட, திராவிடர்களின் தலைவன்- வழிகாட்டி என்பதே எனக்குப் பெருமை' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

    சேலத்தில் புதன்கிழமை நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது:

    பட்டம், பதவிக்காக நாங்கள் திராவிடர் கழகத்திலும், திமுக-விலும் சேரவில்லை. எப்படியாவது அதிகாரத்தைப் பெற வேண்டும் என்றும் நினைக்கவில்லை.

    ஏற்றுக் கொண்ட கொள்கை அடிப்படையில் செயல்பட்டோம். முதலமைச்சர் என்பதைவிட திராவிடர் என்று கூறிக் கொள்வதில்தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தமிழகத்தில் திராவிடர்களுக்கு தனி சரித்திரம் உண்டு. ஆனால் இப்போது யார் யாரையோ திராவிடன் என்று குறிப்பிடுகின்றனர்.

    திராவிடன் என்றால் மூடநம்பிக்கை, ஜாதி, மனுதர்மத்தை எதிர்ப்பவன்.

    மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். மானத்தோடு வாழ வேண்டும் என்ற உணர்வோடு செயல்படுபவன். அந்த உணர்வைத்தான் திராவிட இயக்கங்கள் ஊட்டி வளர்த்து வருகின்றன.

    அவ்விதத்தில் என்னை திராவிடர்களின் தலைவன்- வழிகாட்டி என்று கூறுவதே மகிழ்ச்சியளிக்கிறது.

    எதிர்கால தலைமுறையினர் மானத்தோடு, நல்ல சூழலில் வாழ வேண்டும் என்பதற்காக திராவிட இயக்கங்கள் பாடுபடுகின்றன. அதற்கு நீங்களும் ஆதரவளிக்க வேண்டும்.

    திராவிடர் இயக்கத்தினர் தியாகத் திருவிளக்குகள். உங்கள் வாரிசுகளின் எதிர்காலத்தை எண்ணி அந்த இயக்கங்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கருணாநிதி.

    68 per cent polling at Madurai Cental Bypoll

    Dinamani.com - TamilNadu Page

    மதுரை இடைத் தேர்தலில் 68% வாக்குப்பதிவு

    மதுரை, அக்.12: மதுரை மத்திய சட்டப் பேரவைத் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் 68.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதியின் எந்தப் பகுதியிலும் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை.

    வாக்குப் பதிவு தொடங்கியபோதே சுப்பிரமணியபுரம், சுந்தரராஜபுரம், மகபூப்பாளையம், பேச்சியம்மன்படித்துறை ஆகிய பகுதிகளில், ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    விறுவிறுப்பான வாக்குப்பதிவு: வாக்குப் பதிவு தொடங்கியபோது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாலும், வாக்காளர் சிலர் கட்சி சின்னத்துடன் கூடிய பனியனுடன் வந்ததாலும் ஒரு சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. எனினும் தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினர் பிரதான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 3000-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    தேர்தல் பார்வையாளர்கள்:மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான உதயச்சந்திரன், தேர்தல் பார்வையாளர்கள் சஞ்சீவ்குமார், மீனா, மாஹி, தென்மண்டல ஐ.ஜி. சஞ்சீவ்குமார், மாநகர் காவல்துறை துணை ஆணையர்கள் அறிவுச்செல்வம், பி.நாகராஜன் ஆகியோரும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறதா என்பதைப் பார்வையிட்டனர்.

    வாக்களித்த வேட்பாளர்: பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் கௌஸ்பாஷாவுக்கு மட்டுமே இத்தொகுதியில் வாக்குரிமை உள்ளது. அவர், டி.பி.கே. சாலையில் இருந்த வாக்குச் சாவடிக்கு, வாக்களிக்கச் சென்றபோது, கட்சி சின்னத்துடன் கூடிய பாட்ஜ் அணிந்திருந்தார். இதற்கு வாக்குச் சாவடியில் இருந்த பிற கட்சி ஏஜெண்ட்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அதை எடுத்துவிட்டுச் சென்று வாக்களித்தார்.

    வாக்காளர்கள்: இத்தொகுதியில் மொத்தம் 1,32,231 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 66,331 பேர் ஆண் வாக்காளர்கள், 65,900 பேர் பெண் வாக்காளர்கள்.

    இத் தேர்தலில்தான் தமிழகத்தில் முதன்முறையாக வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்கள் பெரும்பாலும் புகைப்பட அடையாள அட்டையையே எடுத்து வந்திருந்தனர். அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அறிவித்த 13 வகையான மாற்று ஆவணங்களை வாக்களிப்பதற்குப் பயன்படுத்தினர்.

    19 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டன.

    கடந்த பொதுத் தேர்தலில் மொத்தம் 94,224 வாக்குகள் பதிவானது. இதில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் 43,185 வாக்குகளும், அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.டி.கே. ஜக்கையன் 35,992 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் சுந்தரராஜன் 12,038 வாக்குகளும் பெற்றனர்.

    அக்.17-ல் வாக்கு எண்ணிக்கை: இடைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் அனைத்து வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வாக்கு எண்ணிக்கை வரும் அக்.17-ம் தேதி நடைபெறுகிறது.

    Wednesday, October 11, 2006

    Local Body Elections in Pappapatti, Keeripatti, Naattamangalam

    BBCTamil.com

    தமிழகத்தின் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டமங்கலம், கொட்டகாச்சியேந்தல் உள்ளாட்சித் தேர்தல் நிலவரம்

    தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம், கடந்த இரண்டு வாரமாக திருவிழா போல கோலகலமாக நடைபெற்று வருகின்றது. ஆனால் மதுரை ஒட்டிய பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காச்சியேந்தல், நாட்டமங்கலம் போன்ற கிராமப் பஞ்சாயத்துகளில், தேர்தல் பிரச்சாரத்தின் சுவடே தெரியவில்லை.

    தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த பஞ்சாயத்துகளில், பஞ்சாயத்து தலைவர்களை தேர்வு செய்ய தமிழக அரசு கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஒன்று தேர்தலில் யாரும் போட்டியிடுவதில்லை, அல்லது ஊரின் சார்பில் யாராவது தாழ்த்தப்பட்டவரை தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற செய்து, பதவியேற்கவும் செய்து விட்டு, மறு விநாடியே ராஜினாமா செய்ய வைக்கும் நிலைமை நீடிக்கிறது.

    இந்த நான்கு ஊர்களுக்கு தற்போதும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதலாவதாக கீரிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஊரின் சார்பில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ஊரின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகின்றார்.

    ஆனால் இதனை உள்ளூர் மக்கள் ஏற்க மறுக்கின்றனர். இவ்வாறு நிலவும் சூழ்நிலையில், இப்பகுதிகளுக்கு சென்ற பிபிசியின் செய்தியாளர் எல்.ஆர்.ஜெகதீசன், இந்த ஊர்களின் தேர்தல் நிலவரம் குறித்து தயாரித்துள்ள பெட்டகத்தினை பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையான செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


    Madurai (Central) Bypoll Violence - Dinamani Editorial

    Dinamani.com - Editorial Page

    காவலன் காவல் அன்றெனில்...

    மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் நடைபெற்றுள்ள வன்முறைகளுக்காக திமுக, அதிமுக இரு கட்சிகளையும் தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. இரு கட்சிகளுமே, "இதில் உண்மையில்லை' என்று மறுக்கலாம். அல்லது "தொண்டர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு செய்திருக்கலாம்' என்று பொத்தாம்பொதுவில் சொல்லலாம். சட்டத்தின் முன்பாக தங்கள் பொறுப்புகளைக் கை கழுவினாலும் இரு கட்சிகளுக்கும் இது அவமானம். இந்த வன்முறைகளுக்கு மெüன சாட்சியாக இருந்த கூட்டணிக் கட்சிகளுக்கும் (வெற்றி தோல்விகளில் பங்குகொள்வதுபோல) இந்த வன்முறையிலும் தார்மிகப் பொறுப்பு உள்ளது.

    வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதற்காக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒரு சத்திரத்தில் இருந்ததாகவும் அப்போது திமுகவினர் அவரை பணத்துடன் பிடித்து அரைநிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வந்ததாகவும் இதில் காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் செய்திகள் விவரிக்கின்றன. படம்பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு சத்திரத்துக்குள் புகுந்து தாக்குகின்ற அளவுக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம் ஒரு இடைத்தேர்தலின் தோல்வியை ஆளும்கட்சி தன் வீழ்ச்சியாகக் கருதுவதும் அதை எதிர்க்கட்சி தனது அடுத்த பொதுத்தேர்தலுக்கான முதல் கணக்குத் தொடக்கம் என்று நினைப்பதும்தான். இடைத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், இரு கட்சித் தலைமைகளும் கட்சிபலம் முழுவதையும் களம் இறக்குவதைத் தவிர்த்தாலே வன்முறை குறைந்துவிடும்.

    அரசியல் பாகுபாடுகள் ஒரு புறம் இருக்க, இந்த வன்முறைகள் வாக்காளர் மத்தியில் பீதியை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் இதனைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. ஆனால், மதுரை போலீஸ் கமிஷனர் சிதம்பரசாமி பாரபட்சமின்றி செயல்படவில்லை என்றும், தனது பதவிக்கு ஏற்றபடி அவர் நடந்துகொள்ளவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    மதுரை போலீஸ் கமிஷனர் பதவியிலிருந்து சிதம்பரசாமி பணியிடம் மாற்றப்பட்டபோதிலும் இது காவல்துறை முழுவதற்குமே இழுக்கு. அதேநேரம் காவல்துறை என்பது ஆளும்கட்சிக்கே ஆதரவாகச் செயல்படும்- அல்லது செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு காரணம் அரசியல் தலைவர்கள்தான்.

    தங்களுக்கு வேண்டிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பொறுப்புகளில் நியமிப்பதும், வேண்டிய அதிகாரிகளை மட்டுமே ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்காக மாநில அரசிலிருந்து பரிந்துரைப்பதும் அரசியல் தலைவர்கள் ஏற்படுத்திய வழக்கம். அதனால் காவல்துறையிலும் அரசு நிர்வாகத்திலும் கடமையைவிட "விசுவாசம்' முக்கியமானதாக மாறிவிட்டது.

    தனது விசுவாசக் கட்சி ஆட்சியில் இருந்தால் அதற்குப் பாதகமானவற்றை இருட்டடிப்பு செய்வதிலும் எதிர்க்கட்சியாக மாறும்போது ஆளும்கட்சியின் தவறுகளை உள்-ஒற்றுவேலை பார்த்து, பத்திரிகைகளுக்கு தீனிபோடுவதுமாக இவர்களின் விசுவாசக் கடமைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

    யார் ஆட்சி செய்தாலும் தங்கள் கடமையை விட்டுக்கொடுக்காமல் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எந்நாளும் மதிப்பு உண்டு. குறிப்பாக மக்களிடத்தில்! அத்தகைய அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதன் அடையாளம்தான் மதுரைச் சம்பவம்.

    "மாதவர் நோன்பும் மாதரார் கற்பும் காவலன் காவல் அன்றெனில் அன்றாம்'' - என்கிறது தமிழ் இலக்கியம். அரசனின் காவல் இல்லையானால் முற்றும் துறந்த மாமுனிவர்கள் தவம் இயற்றுவதும் பெண்கள் கற்புடன் இருப்பதும் சாத்தியம் இல்லையென்றாகிவிடும் என்பதே இதன் பொருள்.


    Pallavaram - Queen Marys College student competes in Inkbottle symbol

    Headline News - Maalai Malar

    பல்லாவரம் நகரசபை: ராணிமேரி கல்லூரி மாணவி போட்டி

    சென்னை, அக். 11-
    பல்லாவரம் நகரசபையில் 12-வது வார்டில் கல்லூரி மாணவி ரேவதி சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் ராணி மேரி கல்லூரியில் தமிழ் இலக்கியம் 2-வது ஆண்டு படிக்கிறார்.

    கடந்த ஆண்டு கல்லூரியின் செயலாளராக இருந்த ரேவதி தற்போது நகரசபை வார்டில் போட்டியிடுகிறார். 12-வது வார்டில் மொத்தம் 6,390 ஓட்டுகள் உள்ளன. அவருடன் சேர்த்து மொத்தம் 13 பேர் அந்த வார்டில் களத்தில் உள்ளனர்.

    ரேவதிக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் ஓட்டு கேட்டு வருகிறார்கள். 12-வது வார்டில் உள்ள 8 குடியிருப்பு நல சங்கங்கள் அவருக்கு ஓட்டு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் செலவுக்காக தன்னால் ரூ. 15 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்ய முடியாது என்று மைபாட்டில் சின்னத்தில் போட்டியிடும் ரேவதி கூறியுள்ளார். அவர் வீடு வீடாக சென்று நோட்டீசுகளை கொடுத்து வாக்கு சேகரிக்கிறார். கடந்த 2 தினங்களில் மட்டும் தான் அவரது ஆதரவான போஸ்டர்களை ஓட்டி இருந்தனர். ஆட்டோவிலும் சென்று பிரசாரம் செய்தனர். தனக்கு வாக்கு அளித்தால் தூய்மையான குடிநீர், சாலை வசதிகள் செய்து தருவதாக 22 வயதான ரேவதி கூறியுள்ளார்.

    GK Vaasan distributes Dosa batter & Shawls to the Underprivileged

    Headline News - Maalai Malar

    தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்: குடிசை பெண்களுக்கு தோசை மாவு வழங்கிய ஜி.கே.வாசன்

    சென்னை, மாநகராட்சி பகுதியில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    107-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ருக்மணிக்கு ஆதரவு திரட்டினார். புஷ்பா நகர் குடிசை பகுதியில் நடந்து சென்று ஓட்டு கேட்ட வாசனுக்கு வயதான மூதாட்டி உள்பட ஏழை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

    மிகவும் ஏழை பெண்கள் செலவு செய்து ஆரத்தி எடுத்ததை பார்த்து நெகிழ்ந்த வாசன் அவர்களுக்கு சால்வை அணிவித்தார். வியாபாரி ஒருவர் தோசை மாவு பாக்கெட்டுகளை விற்ப னைக்கு வைத்து இருந்தார். ஒரு கிலோ எடையுள்ள அந்த மாவு பாக்கெட் என்ன விலை என்று விசாரித்தார். ரூ.12 என்றார் அவர்.

    உடனே அவரிடம் இருந்த 20 பாக்கெட் மாவுக்கும் தனது பாக்கெட்டில் இருந்து ரூ.240 எடுத்து கொடுத்தார். அந்த மாவு பாக்கெட்டுகளை அங்கு நின்று கொண்டிருந்த ஏழை பெண்களுக்கு கொடுக்கும் படி கூறினார். பின்னர் தொடர்ந்து பிரசாரம் செய்தார்.


    Tuesday, October 10, 2006

    Price Comparison for Commodities - ADMK vs DMK Govt

    Dinamani.com - TamilNadu Page

    பொருள்கள் விலை: ஜெ. ஒப்பீடு

    சேலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, அதிமுக ஆட்சியில் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைவாக இருந்தது; தற்போது அவற்றின் விலை அதிகரித்து விட்டது என்று புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.

    அவர் குறிப்பிட்ட விலை விவரம்: (அடைப்புக்குறிக்குள் அதிமுக ஆட்சியில் நிலவிய விலை)

    மஞ்சள் ஒரு கிலோ ரூ.50 (ரூ.28)

    புளி கிலோ ரூ.50 (ரூ.25)

    வெள்ளைப்பூண்டு ரூ.75 (ரூ.50)

    துவரம்பருப்பு ரூ.52 (ரூ.28)

    உளுத்தம்பருப்பு ரூ.65 (ரூ.25)

    கடலைப்பருப்பு ரூ.45 (ரூ.18)

    பாசிப்பருப்பு ரூ.55 (ரூ.26)

    மைதா ரூ.21 (ரூ.12)

    கோதுமை மாவு ரூ.20 (ரூ.12)

    ரவை ரூ.22 (ரூ.14)

    மொச்சைப்பயறு ரூ.60 (ரூ.25)

    காராமணி ரூ.50 (ரூ.25)

    தனியா ரூ.45 (ரூ.28)

    மிளகாய்வத்தல் ரூ.45 (ரூ.30)

    சுண்டல்கடலை ரூ.50 (ரூ.30)

    சீரகம் ரூ.125 (ரூ.90)

    கடுகு ரூ.30 (ரூ.15)

    வெல்லம் ரூ.12 (ரூ.6)

    சர்க்கரை ரூ.18 (ரூ.15)

    மிளகாய்த்தூள் ரூ.105 (ரூ.55)

    பாமாயில் ரூ.50 (ரூ.30)

    நல்லெண்ணெய் ரூ.50 (ரூ.38)

    தேங்காய் எண்ணெய் ரூ.75 (ரூ.50)

    ரீபைண்டு ஆயில் ரூ.55 (ரூ.28)

    இதுதான் திமுக ஆட்சியின் லட்சணம் என்றார் ஜெயலலிதா.

    Monday, October 09, 2006

    Flashback - 5 Years Back & Still unanswered Questions

    Dinamani.com - Editorial Page

    என்று மடியும் எங்கள் குடிமையின் சோகம்?

    அ.கி. வேங்கட சுப்ரமணியன்

    மறுபடியும் சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கப் போகிறது. 2001 சென்னை மாநகராட்சித் தேர்தலில் சராசரி வாக்குப் பதிவு சுமார் 35 சதவீதம்தான். சில கோட்டங்களில் 20 - 25 சதவீதம்தான். இந்தக் கோட்டங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு கோட்டத்தில் உள்ள மொத்த வாக்குகளில் 10 சதவீத வாக்குகள் கூட கிடைக்கவில்லை. மாநகராட்சி முழுவதிலும் சேர்ந்து முக்கிய இரு கட்சிகளுக்கும் மொத்த வாக்குகளில் சுமார் 10 சதவிகிதமே கிடைத்தது.

    வாக்குப் பதிவின் போது சில கோட்டங்களில் வன்முறையால் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன. குறைவான வாக்குப்பதிவுக்கு இந்த வன்முறையும் ஒரு காரணம். பிற்பகலில் வாக்களிக்கலாம் என்று இருந்த வாக்காளர்கள் முற்பகலில் நடந்த வன்முறையைத் தொலைக்காட்சியில் பார்த்த பின்பு வாக்களிக்க வேண்டாம் என்று வீட்டிலேயே இருந்து விட்டார்கள்.

  • "சென்னையில் சில வாக்குச் சாவடிகள் சூறை; அ.தி.மு.க., - தி.மு.க. மோதல்: வாக்குச் சீட்டுக்கள் கிழிப்பு"

  • "தி.மு.க, அ.தி.மு.க பரஸ்பர புகார்''

  • "திருவான்மியூரில் இரு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிப்பு; கராத்தே தியாகராஜன், சரத்குமார் வாக்குவாதம்; டி .வி., காமிரா சேதம்; மூன்று வேட்பாளர்கள் தர்ணா''

    மேற்கண்டவை எல்லாம் 17-10-2001 தினமணி நாளிதழில் வெளியான செய்தித் தலைப்புகள்.

    வாக்களிக்கும்போது மட்டுமல்ல, 22.10.2001 அன்று வாக்குகள் எண்ணப்படுகின்ற மையங்களிலும் வன்முறை நடந்தது. 23.10.2001 தினமணியில் இதுபற்றி வெளியான செய்தித் தலைப்புகள்:

  • "சென்னையில் வாக்கு எண்ணும் 3 மையங்களில் அ.தி.மு.க வன்முறை - ஸ்டாலின் புகார்''

  • "சென்னையில் 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் - கருணாநிதி கோரிக்கை''

    இந்தச் செய்தியில் "ஜனநாயகப் படுகொலை செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது RAPE செய்யப்பட்டிருக்கிறது என்றார் கருணாநிதி'' என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    உள்ளாட்சி அமைப்புகளில் கட்சி ஆட்சி தேவையில்லை. அந்தந்தப் பகுதி மக்களே தங்களுக்குள் ஒரு நல்ல நபரை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 152வது கிழக்கு அடையாறு கோட்டத்தில் ஒரு வேட்பாளர் "கிழக்கு அடையாறு குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின்'' சார்பில் நிறுத்தப்பட்டார். இந்தத் தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. வேட்பாளருக்காக எளிய முறையில் பிரசாரம் நடந்தது; அவருக்கும் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் குடிமக்களின் இந்த முன் முயற்சி (initiative) இறுதியில் ஒரு சோக நாடகமாகவே முடிந்தது.

    இந்தக் கோட்டத்தின் வாக்கு எண்ணிக்கை இரவு 9.45க்குத் தொடங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தங்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி வாக்கு எண்ண மறுத்து தர்ணா செய்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்திய பிறகு இரவு சுமார் 1 மணிக்குத்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

    பிறகு நடந்தது இந்தக் கோட்டத்தில் உள்ள 16 வாக்காளர்கள் சேர்ந்து அளித்த தேர்தல் மேல்முறையீட்டு மனுவில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால், முறையாக வாக்குச்சீட்டுகள் எண்ணப்படுவது நடைபெற இயலாத சூழ்நிலை வன்முறையால் உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின் வேட்பாளர் வாக்கு எண்ணிக்கை மையத் தலைமை அலுவலரிடமும், காவல் துறையினரிடம் எவ